நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளுக்கான வழிமுறை

Posted On: 28 JUL 2021 4:45PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் ஏலம் மற்றும் நிலக்கரி/பழுப்பு நிலக்கரியின் வருவாயை பகிர்ந்துகொள்ளும் அடிப்படையில் விற்பதற்கான வழிமுறைக்கு 2020 மே 20 அன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான உத்தரவு 2020 மே 28 அன்று பிறப்பிக்கப்பட்டது. வழிமுறையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

வருவாயை பகிர்ந்து கொள்ளும் வழிமுறை அடிப்படையில் நான்கு சதவீதம் தரை விகிதம் முழுக்க ஆய்வு செய்யப்பட்ட மற்றும் ஓரளவு ஆய்வு செய்யப்பட்ட நிலக்கரி பகுதிகளுக்கும் பொருந்தும்.

மதிப்பிடப்பட்ட புவியியல் சேமிப்புகளின் அடிப்படையில்  தொகை நிர்ணயிக்கப்படுகிறது. கோரப்பட்ட வருவாய் பங்கின் சதவீதம், நிலக்கரியின் மொத்த அளவு மற்றும் மதிப்பிடப்பட்ட விலை அல்லது உண்மையான விலை இவற்றில் எது அதிகமாக உள்ளதோ அவற்றின் அடிப்படையில் மாத வருவாயை வெற்றி பெற்ற ஏலதாரர் பகிர வேண்டும்.

விரைவான உற்பத்தி மற்றும் நிலக்கரியை வாயு அல்லது நீர் மயமாக்கலுக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றன. நிலக்கரியின் விற்பனை அல்லது பயன்பாட்டுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. நிலக்கரி உற்பத்தி அட்டவணையில் அதிக நெகிழ்வுத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்தியை பொருத்த அளவில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக கோல் இந்தியா லிமிடெட் திகழ்கிறது. அதனுடன் தொடர்புடைய மின்சாரம் மற்றும் மின்சாரம் சாராத நுகர்வோருக்கு இருதரப்பு எரிசக்தி விநியோக ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் நிலக்கரியை கோல் இந்தியா லிமிடெட் விற்கிறது. வர்த்தகர்கள் உள்ளிட்ட நுகர்வோருக்கும் மின்னணு ஏல முறைகளின் மூலம் நிலக்கரியை கோல் இந்தியா லிமிடெட் விற்கிறது.

2020-21-ம் ஆண்டில் நிலக்கரியின் தேவையில் 23.7 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 2015 மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-ன் படி, ஏல முறையின் மூலம் நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மின் தளங்களின் மூலம் சுரங்கங்கள் ஏலம் விடப்படுகின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டிருந்தால் ஏலத்தில் அவர் பங்கு பெற முடியாது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739928

 

-----



(Release ID: 1740101) Visitor Counter : 244


Read this release in: English , Urdu , Punjabi