பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத்துறையில் தற்சார்பு இந்தியா கொள்கை: மக்களவையில் தகவல்

Posted On: 28 JUL 2021 5:05PM by PIB Chennai

பாதுகாப்புத்துறையில் தற்சார்பு இந்தியா கொள்கை பின்பற்றப்படுவதாக பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் தெரிவித்தார்.

அவர் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2020ம் ஆண்டு முதல் பாதுகாப்புத்துறை தளவாட கொள்முதலுக்கு ரூ.86,623.55 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் உள்நாட்டு நிறுவனங்களிடம் வழங்கப்பட்டனஉள்நாட்டு நிறுவனங்களிடம் கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டிய பொருட்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ரூ.200 கோடிக்கும் குறைவான கொள்முதலுக்கு, சர்வதேச டெண்டர் விடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-22ம் ஆண்டில், ராணுவ நவீனமயமாக்கத்துக்கு  உள்நாட்டு கொள்முதலுக்கான ஒதுக்கீடு (ரூ.71438.36 கோடி) கடந்த ஆண்டை விட 64.09 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிரி ட்ரோனை அழிக்கும் தொழில்நுட்பம்:

எதிரி நாட்டு ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த உள்நாட்டு தொழில்நுட்பம்இரு வகைகளில் செயல்படும். ஒன்று, எதிரி நாட்டு ட்ரோன்களின் தகவல் தொடர்பை முடக்கி செயல் இழக்கச் செய்யும் மற்றொன்று லேசர் குண்டுகள் மூலம் எதிரி ட்ரோன்களை அழிக்கும்.

தீவிரவாத தாக்குதல்களில் உயிர்நீத்த வீரர்கள்:

நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் கடந்த 2019ம் ஆண்டு 80 வீரர்களும், 2020ம் ஆண்டில் 62 வீரர்களும், இந்தாண்டில் ஜூன் வரை 16 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

புத்தாக்கங்கள்:

பாதுகாப்புத்துறை சிறந்து விளங்குவதற்கான புத்தாக்கங்களை கண்டுபிடிப்பதற்காக, பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை, -டெக்ஸ் Innovations for Defence Excellence (iDEX) என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புத்தாக்கங்களை கண்டுபிடிக்கும் 300 தொடக்க நிறுவனங்கள்/ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் / தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.498.80 கோடி நிதியுதவி அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

கொவிட் மேலாண்மை:

கொவிட் மேலாண்மை நடவடிக்கையில் உதவுவதற்காக, பொது மருத்துவமனைகளுக்கு, ராணுவ டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் 602 பேரும், செவிலியர்கள் 224 பேரும், துணை மருத்துவ ஊழியர்கள் 1802 பேரும் அனுப்பப்பட்டனர். கொவிட் மோலாண்மை நடவடிக்கைக்காக, பணிக்காலத்தை நிறைவு செய்த, 236 மருத்துவ அதிகாரிகளுக்கு, பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739956

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739954

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739953

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739951

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739949

                                                                                ------


(Release ID: 1740051)
Read this release in: English , Marathi , Punjabi