வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களின் நிதிநிலையில் முன்னேற்றம்
Posted On:
28 JUL 2021 1:22PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களின் நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
மக்களவையில் அவர் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில், தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி தற்போதைய விலையில் (அடிப்படை ஆண்டு 2011-12) அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் விவரங்கள் 2015-16ம் ஆண்டு முதல் 2019-20ம் ஆண்டு வரை பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் ரயில், சாலைகள், மற்றும் விமான இணைப்பு, தொலை தொடர்பு, மின்சாரம் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
நீர் விநியோகம், மின்சாரம், இணைப்பு, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்துறை கட்டமைப்புகளை வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
நாகாலாந்தில் வடகிழக்கு கவுன்சில் அமல்படுத்திய 32 திட்டங்கள் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டங்கள் ரூ.619.44 கோடியில் 2018 முதல் 2021ம் ஆண்டுவரை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டன.
வடகிழக்கு சிறப்பு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நாகாலாந்தில் ரூ.233.68 கோடி மதிப்பில் 13 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் அனுமதித்த பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அவை விரைவில் முடிக்கப்படவுள்ளன. அவற்றின் விவரங்கள் இணைப்பில் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739806
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739805
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739804
****
(Release ID: 1739911)
Visitor Counter : 187