சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 440 மில்லியன் என்ற இலக்கை கடந்தது : உலகளவில் மிகப் பெரிய விரைவான சாதனை
Posted On:
27 JUL 2021 12:53PM by PIB Chennai
இந்தாண்டு ஜூலை இறுதிக்குள் 516 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு, கடந்த மே மாதம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால், அரை பில்லியன் (50 கோடி) கொவிட் தடுப்பூசிகள் என்ற இலக்கை இந்தியா தவறவிடும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தவறான தகவல்.
2021 ஜனவரி முதல் 2021 ஜூலை 31ம் தேதி வரை 516 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்பதுதான் உண்மை.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, அதன்படி விநியோகிக்கப்டுகின்றன. இம்மாத இறுதிக்குள் நாடு முழுவதும், 516 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருக்கும். ஆனால், அனைத்து தடுப்பூசிகளும் இம்மாத இறுதிக்குள் பயன்படுத்தப்படும் என அர்த்தம் அல்ல.
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 457 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 31ம் தேதிக்குள், கூடுதலாக 60.3 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். இதை சேர்த்தால், இம்மாத இறுதிக்குள் 517 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.
இந்தியாவில் 440 மில்லியன் (44.19 கோடி) பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே மிக அதிகளவிலான எண்ணிக்கை. இவை குறுகிய காலத்தில் விரைவாக போடப்பட்டுள்ளன. இவர்களில் 9.60 கோடிப் பேருக்கு, இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம், மொத்தம் 11.97 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன. அதேபோல், ஜூலை மாதத்தில் 26ம் தேதி வரை 10.62 கோடி தடுப்பூசிகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739397
***
(Release ID: 1739430)
Visitor Counter : 260