இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி திட்டத்தின் கீழ் 2018-19 முதல் சுமார் ரூ 765 கோடி செலவிடப்பட்டுள்ளது: திரு அனுராக் தாகூர்

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2021 5:33PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி அனுராக் தாகூர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் 2020-க்கான இந்திய வீரர்களின் தயார் நிலையை கண்காணிப்பதற்காக உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பெருந்தொற்றின் போது விளையாட்டு வீரர்களை பாதுகாப்பதற்காக பலருக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டது. டோக்கியோவிற்கு செல்லக்கூடிய இதர வீரர்களுக்கு சமூக இடைவெளியோடு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியின் கீழ் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் மூலம் பதக்கம் வெல்லக்கூடியவர்களுக்கான தனிப்பட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.

2018-19 முதல் இது நாள் வரையிலான டாப்ஸ் திட்டத்தின் கீழான செலவு ரூ 54.26 கோடியாகவும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி திட்டத்தின் கீழான செலவு ரூ 711.46 கோடியாகவும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739124

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1739262) வருகையாளர் எண்ணிக்கை : 272
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi