சுரங்கங்கள் அமைச்சகம்

கனிமங்களுக்கான உரிமைத் தொகை

Posted On: 26 JUL 2021 2:30PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கனிமங்கள், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கீழ்காணும் விவரங்களை அளித்தார்.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1957-ன் விதிகளின் படி கனிமங்களுக்கான உரிமைத் தொகை அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது.

கனிமங்களுக்கான உரிமைத் தொகையை மாற்றியமைப்பது குறித்தும், கனிமங்களுக்கானடெட்வாடகை (நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சேமிப்பிற்கான மணல் மற்றும் சிறு கனிமங்கள் தவிர) குறித்தும் ஆய்வு செய்வதற்காக, ஆய்வு குழு ஒன்று 2018 பிப்ரவரி 9 அன்று அமைக்கப்பட்டது.

கனிம வளம் மிக்க மாநிலங்களின் பிரதிநிதிகள் மற்றும் கனிம தொழில்கள், சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 2019 ஜூலை 25 அன்று தனது இறுதி பரிந்துரையை குழு சமர்ப்பித்தது.

இதற்கிடையே, 2021 ஜனவரி 13 அன்று சட்டப்பூர்வ கட்டணங்கள் மற்றும் எதிர்கால ஏலங்களுக்கான தேசிய கனிம குறியீட்டை உருவாக்கும் கனிம அமைச்சகத்தின் முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, தனிப்பட்ட கனிமங்களுக்கான தேசிய கனிம குறியீட்டை உருவாக்குவதற்கான குழு ஒன்றை 2021 ஏப்ரல் 6-ம் தேதியிட்ட உத்தரவு மூலம் அமைச்சகம் அமைத்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739025

 

-----



(Release ID: 1739255) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Marathi , Punjabi