பாதுகாப்பு அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தில், பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை

Posted On: 26 JUL 2021 3:59PM by PIB Chennai

கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர்.

1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார்.

அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.

 

----



(Release ID: 1739190) Visitor Counter : 218


Read this release in: English , Urdu , Hindi