கலாசாரத்துறை அமைச்சகம்

சர்வதேச புத்த மத கூட்டமைப்புடன் இணைந்து ஆஷாத பூர்ணிமா தர்ம சக்கர தினம் 2021-ஐ கலாச்சார அமைச்சகம் நாள் முழுவதும் கொண்டாடியது: புத்தரின் போதனைகளை குடியரசுத் தலைவர், பிரதமர் நினைவுக் கூர்ந்தனர்

Posted On: 24 JUL 2021 7:55PM by PIB Chennai

இந்தியர்கள் மற்றும் சர்வதேச புத்த சமுதாயத்திற்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் ஆஷாத பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், தனது புத்த மத பாரம்பரியத்தை இந்தியா இன்று கொண்டாடியது.

சர்வதேச புத்த மத கூட்டமைப்புடன் இணைந்து கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்த ஆஷாத பூர்ணிமா-தம்ம சக்கர தின கொண்டாட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், “புத்த மதத்தை பின்பற்றும் 550 மில்லியன் பேரை தாண்டியும் புத்த மதம் நீள்கிறது. மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் மற்றும் நாத்திகர்கள் கூட புத்த மதத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்,” என்றார். 

சர்வதேச பிரச்சினைகளில் புத்தமத மாண்புகள் மற்றும் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது, மேம்பட்ட இடமாக உலகை மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் மேலும் கூறினார்.

இந்த புனிதமான தினத்தன்று காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்றைய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பகவான் புத்தரின் போதனைகள் மிகவும் பொருத்தமாக இருப்பதாக கூறினார்.

அனைவருக்கும் தம்ம சக்கர தினம் மற்றும் ஆஷாத பூர்ணிமா வாழ்த்துகளை தெரிவித்த அவர், இன்று நாம் குரு பூர்ணிமாவை கொண்டாடுகிறோம் என்றும், இந்த நாளில் தான் ஞானம் அடைந்ததற்கு பின்னர் தமது முதல் செய்தியை உலகத்திற்கு புத்த பகவான் வழங்கினார் என்றும் கூறினார்.

அறிவு எங்கு உள்ளதோ, அங்கு முழு நிறைவு இருக்கும் என்று நம் நாட்டில் கூறப்படுகிறது. இவ்வாறு தெரிவிப்பது புத்தராகவே இருக்கும்போது உலக நன்மையுடன் இணைந்த தத்துவமாக இயற்கையாகவே அது மாறுகிறது என்றும் அவர் கூறினார்.

துறவறம் மற்றும் சகிப்புத் தன்மையில் வேரூன்றி இருக்கும் புத்தர் ஒன்றை கூறுகையில் அவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, உலகத்தையும், மனிதகுலத்தையும் அவை ஒன்றிணைக்கின்றன என்று பிரதமர் கூறினார்.

புத்தரின் போதனைகளைப் பின்பற்றி இன்று அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக மாறியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் போதி மரக்கன்று ஒன்றை குடியரசுத் தலைவர் நட்டார். தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் உள்ள புத்த மத தலைவர்கள், தவத்திரு தலாய் லாமா, வியட்நாம் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து காணொலி செய்திகள் பெறப்பட்டன.

உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான புத்த மதத்தினர் நிகழ்ச்சிகளை நேரலையில் கண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738674

*****************



(Release ID: 1738691) Visitor Counter : 219