சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஐந்தாவது வடகிழக்கு இந்திய பாரம்பரிய நாகரிக வாரத்தை டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

Posted On: 24 JUL 2021 6:34PM by PIB Chennai

 “ஐந்தாவது வடகிழக்கு இந்திய பாரம்பரிய நாகரிக வாரத்தை (என் ஈ ஐ எஃப் டபுள்யூ) 2021-மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள் செல்வி பிரதிமா பவுமிக் மற்றும் திரு ஏ நாராயணசாமி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளர் திருமிகு அஞ்சலி பாவ்ரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் வீரேந்திர குமார், வடகிழக்கில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த புதுமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை மற்றும் அதன் தேசிய நிறுவனமான என் ஐ ஈ பி வி டி-ஐ பாராட்டினார்.

உள்நாட்டு மற்றும் பாரம்பரிய திறமைகளை ஊக்குவிப்பதற்கான வருடாந்திர நிகழ்ச்சியாக இதை ஆக்கவும், இந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் மூலம் வடகிழக்கில் உள்ள அனைத்து சமூகத்தினரின் பாரம்பரியத்தை பாதுக்காப்பதற்கும் அவர் உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு ஏ நாராயணசாமி, சிறந்த கலைஞர்களின் தாயகமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதி திகழ்வதாகவும், ஜவுளி, கைவினைகள் தொழிலில் பெரிய அளவில் முறைசாரா தொழில்முனைதல் அங்கிருப்பதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் செல்வி பிரதிமா பவுமிக், ஜவுளி மற்றும் கைவினை தொழில்களில் வடகிழக்கு பெண்கள் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738644

*****************



(Release ID: 1738667) Visitor Counter : 223


Read this release in: English , Urdu , Hindi , Punjabi