கலாசாரத்துறை அமைச்சகம்
சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர் ஆசாத் பற்றிய கண்காட்சி: புது தில்லியில் தொடங்கிவைத்தார் மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்
Posted On:
24 JUL 2021 4:15PM by PIB Chennai
விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, தியாகி சந்திரசேகர் ஆசாதின் வாழ்க்கையைப் போற்றும் வகையில் “ஆசாத் கி சௌர்யா கதா” என்ற தலைப்பிலான கண்காட்சியை புதுதில்லியின் இந்திராகாந்தி தேசிய கலை மையத்தில் மத்திய கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த கலை மையத்தில் கொண்டாடப்பட்டு வரும் ‘கலாகோஷ் பிரதிஷ்டா திவஸ்’ என்ற மூன்று நாள் கொண்டாட்டங்களின் இரண்டாவது நாளில் புத்தகங்கள் மற்றும் ஆவணப்படங்களும் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர், “விடுதலையின் அம்ருத் மகோத்சவம் என்னும் திருவிழாவின் வாயிலாக சுதந்திரப் போராட்டத்தின் போது எவ்வளவு பேர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தார்கள் என்பது குறித்து இளம் தலைமுறையினருக்கு தெரியவரும். நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த ஏராளமானோரும் சுதந்திரப் போரில் உயிர் நீத்தார்கள், ஆனால் வரலாற்றில் அதுபற்றி குறிப்பிடப்படவில்லை. நம் நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடுவதற்காக ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவம்' என்று பிரதமர் பெயர் சூட்டினார். 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து அமைச்சகங்கள்/ துறைகளை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்”, என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738583
*****************
(Release ID: 1738645)
Visitor Counter : 208