எஃகுத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்பு எஃகுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள்
Posted On:
23 JUL 2021 3:18PM by PIB Chennai
சிறப்பு எஃகுக்கு உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்புத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
https://youtu.be/8YTK7STbooU
இது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான விடைகளும் பின்வருமாறு:
1. சிறப்பு எஃகுக்கான உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்புத் திட்டம் என்றால் என்ன?
நாட்டில் சிறப்பு எஃக்கின் உற்பத்தியை ஊக்கத்தொகை அளிப்பதன் மூலம் பெருக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்சமயம் நாட்டின் எஃகு உற்பத்தி குறைவாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அதன் உள்நாட்டு உற்பத்தி பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதலீடு மற்றும் தொழில்நுட்பங்கள் ஈர்க்கப்படும்.
2. சிறப்பு எஃகு என்றால் என்ன?
எஃகு உற்பத்தி செயல்பாட்டின் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சிறப்பு எஃகு உள்ளது.
3. சிறப்பு எஃகுக்கான உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் எவையெல்லாம் வரும்?
உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்காக சிறப்பு எஃகுத் துறையின் 5 பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன:
1. பூசிய/ பூசப்பட்ட எஃகுப் பொருட்கள்.
2. அதிக வலிமை/ தாங்கு திறன் கொண்ட எஃகு.
3. சிறப்பு வாய்ந்த தண்டவாளங்கள்.
4. கலவை எஃகு பொருட்கள் மற்றும் எஃகு கம்பிகள்.
5. மின்சார எஃகு.
4. எதற்காக இந்த பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன?
இந்த பொருட்களுக்கான உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதி மாற்று, ஏற்றுமதி மற்றும் முதலீடுகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
5. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கும் ஊக்கத்தொகையின் மதிப்பு எவ்வளவு?
மொத்த மதிப்பீடு ரூ 6,332 கோடி ஆகும்.
6. இதன் மூலம் நாட்டுக்கு எவ்வாறு பலன் கிடைக்கும்?
2019-20-ல் உற்பத்தி 17.6 லட்சம் மில்லியன் டன்கள், மதிப்பு ரூ 97,287 கோடியாக இருக்கும் நிலையில், 2026-27-ல் உற்பத்தி 42.2 லட்சம் மில்லியன் டன்கள், மதிப்பு ரூ 2.42 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதியின் அளவு குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கும்.
7. இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பலன் கிடைக்குமா?
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738126
=----
(Release ID: 1738336)
Visitor Counter : 330