இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

சென்னை ஐஐடியின் தண்ணீர் சுகாதார சீர்மிகு மையம்(வாஷ்) புதிய ஆய்வகம் அமைக்க என்பிசிசி உதவி

Posted On: 22 JUL 2021 6:32PM by PIB Chennai

சென்னை ஐஐடி-யின் தையூர் வளாகத்தில், தண்ணீர் சுகாதார சீர்மிகு மையம்(வாஷ்) ஆய்வுக் கூடம் அமைப்பதற்கு  என்பிசிசி(இந்தியா) நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியை வழங்கியுள்ளது

என்பிசிசி (இந்தியா) மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனம். சென்னை ஐஐடியின் தையூர் வளாகத்தில் அமையவுள்ள ஆய்வுக்கூடம் 1018 சதுர மீட்டரில் அமையவுள்ளது. இது சென்னை ஐஐடியின் அதிகரித்துவரும் கட்டமைப்பு தேவைக்கு உதவும். இதன் ஆராய்ச்சியாளர்கள், நாடு மற்றும் உலகின் நலனுக்காக நவீன ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கான ஒப்பந்தத்தில் என்பிசிசி(இந்தியா) தலைமை மேலாளர் திரு தெபாசிஸ் சதாபதி, சென்னை ஐஐடி பேராசிரியர் பி.மகேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது என்பிசிசி(இந்தியா), சென்னை ஐஐடி, முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலக மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். சென்னை ஐஐடி அதிகாரிகள் காணொலி மூலம் பங்கேற்றனர்.

இந்த புதிய ஆய்வுக்கூடத்தில், 12 கூடுதல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான நிலத்தை சென்னை ஐஐடி வழங்குகிறது.

இந்த கூட்டுறவுக்கான வசதிகளை, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் யுக்தி கூட்டு பிரிவு ஏற்பாடு செய்தது.

இது குறித்து முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜயராகவன் கூறுகையில், ‘‘

சென்னை ஐஐடி, பல ஆராய்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்கிறது. இந்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு கட்டமைப்பு தேவை. சென்னை ஐஐடியின் தையூர் வளாகத்தில் ஆய்வுக்கூடம் அமைக்க என்பிசிசி (இந்தியா) உதவுவது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

என்பிசிசி( இந்தியா) தலைமை நிர்வாக இயக்குனர் திரு பி.கே.குப்தா கூறுகையில், சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் ஆராய்ச்சிக்கான குறைந்த செலவின பற்றாக்குறையை போக்குவதில் இதுபோன்ற பங்களிப்புகள் முக்கியமானவை ’’ என்றார்.

சென்னை ஐஐடி கம்பெனிகள் விவகார போராசிரியர் மகேஷ் பன்சாக்நுலா பேசுகையில், என்பிசிசி அளிக்கும் உதவிக்கு நன்றி தெரிவித்தார். சென்னை ஐஐடியின் தையூர் வளாகத்தில்  மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து சென்னை ஐஐடியின் டீன்(திட்டமிடல்) பேராசிரியர் லிஜி பிலிப் விளக்கினார். சென்னை ஐஐடியின் தையூர் வளாகம் பிரதமரால் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்  விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleseDetailm. aspx? PRID=1737834

-----



(Release ID: 1737905) Visitor Counter : 264


Read this release in: English , Urdu , Hindi , Punjabi