பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான இட ஒதுக்கீடு

Posted On: 22 JUL 2021 4:27PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 வழிவகை செய்கிறது. , பி மற்றும் சி பிரிவுகளில் உள்ள மொத்த காலியிடங்களில் நான்கு சதவீதம் கீழ்கண்ட முறையில் நேரடியாக நிரப்பப்பட வேண்டும்.

பார்வையின்மை மற்றும் குறைந்த அளவு பார்வை உள்ளவர்களுக்கு 1 சதவீத பணியிடங்களும், காது கேட்கும் குறைபாடு உள்ளவர்களுக்கு 1 சதவீத பணியிடங்களும், பெருமூளை வாதம், தொழு நோயில் இருந்து குணமடைந்தவர்கள், உயரம் குறைவானவர்கள், ஆசிட் தாக்குதலை எதிர்கொண்டவர்கள் மற்றும் தசைநார் தேய்வு உள்ளவர்களுக்கு 1 சதவீத பணியிடங்களும்,

மன இறுக்கம், அறிவுசார் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, மனநல குறைபாடு; மற்றும் மேற்கண்டவற்றில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு 1 சதவீத பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737741

----



(Release ID: 1737882) Visitor Counter : 158


Read this release in: English , Urdu , Marathi , Punjabi