மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பருவநிலை மாற்றம் மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும் - குடியரசு துணைத் தலைவர்

Posted On: 21 JUL 2021 3:12PM by PIB Chennai

பருவநிலை மாற்றம் மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும் என  குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

உலக பல்கலைக்கழகங்களின் உச்சி மாநாட்டை .பி.ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம் நடத்தியது. இதில் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றினார். மத்திய கல்வி மற்றும்  திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றினார். இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘‘எதிர்கால பல்கலைக்கழகங்கள்: நிறுவன எழுச்சி, சமூக பொறுப்பு மற்றும் சமுதாய தாக்கத்தை உருவாக்குவது’’.

இந்த உச்சி மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பேசுகையில்,

 ‘‘பருவநிலை மாற்றம் மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும். உலகம் சந்திக்கும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் விஷயங்கள் குறித்து பல்கலைக்கழகங்கள் விவாதிக்க வேண்டும். தேவைக்கு தகுந்தபடி அரசால் அமல்படுத்தக்கூடிய கருத்துக்களை பல்கலைக்கழகங்கள் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.   

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் பேசுகையில் கூறியதாவது:

இந்திய உயர்கல்வி முறைக்கு, ஒரு புதிய கற்பனையை புதிய தேசிய கல்வி கொள்கை-2020 அறிவித்துள்ளதுஇது தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கை தெரிவிக்கிறது. தரம், சமத்துவம், அணுகல் மற்றும் மலிவு ஆகிய நான்கும் புதிய கல்வி கொள்கையின் 4 தூண்கள். இதன் மூலம் புதிய இந்தியா உருவாகும்.

இந்தியாவில் படிக்கவும் - இந்தியாவில் இருக்கவும்என்ற தொலைநோக்குடன், உலகளாவிய கல்வி மையமாக மாறுவதை நோக்கி இந்தியா செல்லும்கல்வியை முழுமையான, புதுமையான, மொழியியல் ரீதியாக மாறுபட்ட, மற்றும் பல ஒழுங்குடன் கூடிய முறையாக மாற்ற அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. மொழி வரம்புகள் அல்லது பிராந்திய மொழியியல் கட்டுப்பாடுகளால் எந்த மாணவரும் கஷ்டப்படக் கூடாது.

இவ்வாறு மத்திய அமைச்சர்  திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737492

----(Release ID: 1737520) Visitor Counter : 36