நிதி அமைச்சகம்

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், 2015 ஏப்ரல் முதல் ரூ.15.97 லட்சம் கோடி மதிப்பில் 30 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டன: மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 20 JUL 2021 4:11PM by PIB Chennai

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், 2015 ஏப்ரல் முதல் ரூ.15.97 லட்சம் கோடி மதிப்பில் 30 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் தெரிவித்தார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

2019-20 மற்றும் 2020-21ம் நிதியாண்டுகளில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.6.41 லட்சம் கோடி மதிப்பில் 11.29 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் முத்ரா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டது. அப்போது முதல் ரூ.15.97 லட்சம் கோடி மதிப்பில் 30 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் முனைவு நடவடிக்கைளுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது.

15CA/15CB வருமானவரி படிவங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் தளர்வு:

வருமானவரி சட்டம், 1961-ன்படி 15CA/15CB படிவங்களை மின் முறையில் தாக்கல் செய்ய வேண்டும்வருமானவரி இணையதளத்தில்  www.incometax.gov.in, இதை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 15 ஆக இருந்தது.

இதை மின்முறையில் தாக்கல் செய்ய , வரி செலுத்துவோர் சிரமங்களை சந்தித்தனர். எனவே இதற்கான தாக்கல் தேதியை, 2021 ஆகஸ்ட் 15ம் தேதிவரை நீட்டிக்க நேரடி வரி வாரியம் முடிவு செய்துள்ளது.

 கட்டமைப்பு துறை மறுமலர்ச்சி நடவடிக்கை:

கொவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரித்தது. பணப்புழக்கத்தை எளிதாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

கொவிட் -19 தாக்கத்தை குறைக்க, கட்டமைப்பு துறைகளுக்கு உதவ தற்சார்பு இந்தியா நிதியுதவி அறிவிக்கப்பட்டதுகொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம்கோடி மதிப்பிலான கடன் உத்திரவாத திட்டம் கடந்த ஜூன் 28ம் தேதி அறிவிக்கப்பட்டது. கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் அவசரகால கடன் உத்தரவாதம் திட்டம் அறிவிக்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த நாட்டின் கட்டமைப்பு திட்டங்களுக்கான முதலீட்டு செலவினங்களை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது.

மத்திய அரசின் ஒப்பந்தங்களுக்கான பாதுகாப்பு நிதி, அனைத்து ஒப்பந்தங்களிலும்இந்தாண்டு இறுதி வரை 10 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஏலம் எடுப்பதற்கான பாதுகாப்பு தொகையும் இந்தாண்டு இறுதி வரை தள்ளபடி செய்யப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737197

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737217

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737226

----



(Release ID: 1737390) Visitor Counter : 226


Read this release in: Telugu , English , Urdu , Punjabi