புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்கு பருவமழை குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆய்வு : இந்திய வானிலைத்துறைக்கு கூடுதல் ரேடார்கள்

Posted On: 18 JUL 2021 5:43PM by PIB Chennai

இந்திய வானிலைத்துறையின் தலைமையகத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தென்மேற்கு பருவமழையின் போக்கு  குறித்து ஆய்வு நடத்தினார்.

புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங், இந்திய வானிலைத் துறையின் தலைமையகத்தில் உள்ள மவுசம் (வானிலை) பவனுக்கு சென்றார்

அங்கு ஒரு மணி நேரம் இருந்த டாக்டர் ஜித்தேந்திர சிங், தென்மேற்கு பருவமழையின் போக்குகள் குறித்து ஆய்வு செய்தார். செயற்கைகோள் மற்றும்  ரேடார் பிரிவுகளுக்கு சென்ற டாக்டர் ஜித்தேந்திர சிங், நிகழ்நேர அடிப்படையில் வானிலை தகவல்களை பெறும் நடைமுறைகள் குறித்து ஆலோசித்தார்.

இந்திய வானிலைத் துறைக்கு தற்போது நாடு முழுவதும் 27 ரேடார்கள் உள்ளன எனவும், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50 ஆக உயரும் என்றும் டாக்டர் ஜித்தேந்திர சிங்கிடம் அதிகாரிகள் கூறினர்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மழை இயல்பை விட 10 சதவீதம் அதிகமாக இருந்ததாகவும், ஜூலை மாதத்தில் தற்போது வரை 26 சதவீதம் குறைவாக உள்ளதாகவும், அமைச்சரிடம் இந்திய வானிலை துறை தலைமை இயக்குனர் டாக்டர் மிருத்யுஞ்ச மொஹாபத்ரா தெரிவித்தார்

விவசாயிகளின் நன்மைக்காக, வேளாண்துறை அமைச்சகத்தின் எம்கிசான் இணையதளத்தை பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வாரம் இரு முறை 42 மில்லியனுக்கு மேற்பட்ட குறுந்தகவல்கள் தற்போது அனுப்பப்படுகின்றன. அதிநவீன மின்னல் முன்னறிவிப்பு கருவிகளை வைத்துள்ள உலகின் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என டாக்டர் மொஹாபத்ரா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736597

-----



(Release ID: 1736612) Visitor Counter : 260