பாதுகாப்பு அமைச்சகம்
'தெற்கு விமானப்படை பிரிவு தளபதிகளின்' மாநாடு
Posted On:
16 JUL 2021 5:05PM by PIB Chennai
தெற்கு விமானப்படை பிரிவு தளபதிகளின் மாநாட்டிற்காக 2021 ஜூலை 15 மற்றும் 16 அன்று விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா திருவனந்தபுரத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்ற ஏர் மார்ஷல் மனவேந்திர சிங், பிரிவின் செயல்பாட்டு தயார்நிலை குறித்து எடுத்துரைத்தார்.
தெற்கு விமானப்படை பிரிவு தளபதிகளுடன் உரையாடிய விமானப்படை தலைமை தளபதி, கடமைகளை ஆற்றுவதற்காக எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை இந்திய விமானப்படைக்கு இருப்பதாக தெரிவித்தார்.
பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தியதற்காகவும் தனது பொறுப்பு பகுதியில் உள்ள முக்கியத்துவம் மிக்க பணிகளை சிறப்பாக செய்வதற்காகவும் தெற்கு விமானப்படை பிரிவை அவர் பாராட்டினார். புதிதாக படையில் சேர்க்கப்பட்டுள்ள இலகு ரக போர் விமானமான தேஜாஸ் மற்றும் சு-30 எம்கேஐ ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்துவது குறித்து விமானப்படை தளபதி திருப்தி தெரிவித்தார்.
*****************
(Release ID: 1736282)
Visitor Counter : 255