தேர்தல் ஆணையம்
மேற்குவங்கத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2021 12:28PM by PIB Chennai
மேற்கு வங்கத்தின் மாநிலங்களவை உறுப்பினர், பதவி விலகியதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு தினேஷ் திரிவேதி இந்த வருடம் பிப்ரவரி மாதம் பதவி விலகினார்.
இதனால் இந்த காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல், ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தலுக்கான அறிவிப்பு ஜூலை 22-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 29-ஆம் தேதி ஆகும். ஜூலை 30 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 2 ஆகும்.
இந்தத் தேர்தலை, கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தும்படி, மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736095
****
(Release ID: 1736095)
(வெளியீட்டு அடையாள எண்: 1736138)
வருகையாளர் எண்ணிக்கை : 262