நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி இழப்பீட்டிற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள ரூ 75,000 கோடி 2021-22-ம் ஆண்டின் முதல் பாதிக்கான இந்திய அரசின் கடன் திட்டத்தை மாற்றாது

Posted On: 15 JUL 2021 7:06PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டிற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொடர் கடன் வசதியின் கீழ் ரூ 75,000 கோடியை இந்திய அரசு இன்று வழங்கியுள்ளது.

ஆனால், 2021 மார்ச் 31 அன்று வெளியிடப்பட்டு ஏப்ரல் 2021 - செப்டம்பர் 2021-க்கான சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியீட்டு அட்டவணையில்அறிவிக்கப்பட்ட தற்போதைய நிதி ஆண்டின் முதல் பாதியின் மிச்சமிருக்கும் காலத்திற்கான இந்திய அரசின் கடன் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

*****************


(Release ID: 1735971) Visitor Counter : 273


Read this release in: English , Urdu , Hindi , Kannada