சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

முன்னேறிய போக்குவரத்து தொழில்நுட்பத்திற்கான திறன்மிகு மையத்தை அமைப்பதற்காக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாடெமி ஒப்பந்தம்

Posted On: 15 JUL 2021 4:31PM by PIB Chennai

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாடெமி (IAHE), முன்னேறிய போக்குவரத்து தொழில்நுட்பத்திற்கான திறன்மிகு மையத்தை நோய்டாவில் அமைப்பதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங், தலைமை இயக்குநர் (சாலை மேம்பாடு) மற்றும் சிறப்பு செயலாளர் திரு ஐ கே பாண்டே, இணை செயலாளர், சரக்கு போக்குவரத்து மற்றும் இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாடெமி திரு சஞ்சீவ் குமார், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஐயன் ஜேக்கப்ஸ், ஒருங்கிணைந்த போக்குவரத்து புதுமைகளுக்கான மையத்தின் இயக்குநர் பேராசிரியர் விநாயக் தீட்சித் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாடெமி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரிகள் காணொலி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

நாட்டின் சாலை பாதுகாப்பு நிலைமையை இந்த திட்டம் மேம்படுத்தும் என்று நிகழ்ச்சியில் பேசிய திரு நிதின் கட்கரி தெரிவித்தார்.

திறன் வளர்த்தல், தொழில்நுட்ப பரிமாற்றம், இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாடெமியின் கேட்ஸை (CATTS) நிறுவுவதற்கான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. திறன்மிகு போக்குவரத்து அமைப்புகள் மற்றும் மாதிரி மீதான சான்றிதழ் படிப்பு ஒன்றையும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும்.

மேலும், ஆஸ்திரிலேயா மற்றும் இந்தியாவில் போக்குவரத்து துறையில் உள்ள தொழில்கள் மற்றும் புது நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) இந்த ஒப்பந்தம் ஊக்கப்படுத்துவதோடு, முன்னேறிய போக்குவரத்து அமைப்புகளில் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735874

*****************



(Release ID: 1735903) Visitor Counter : 250