இந்திய போட்டிகள் ஆணையம்

ஜே எஸ் டபிள்யூ சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை சினர்ஜி மெட்டல்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் வாங்க சிசிஐ ஒப்புதல் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள்

Posted On: 15 JUL 2021 11:53AM by PIB Chennai

தானியங்கி ஒப்புதல் முறையில் ஜே எஸ் டபிள்யூ சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை சினர்ஜி மெட்டல்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் வாங்குவது தொடர்பான அறிவிக்கையை இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ) பெற்றது. இதற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

சினர்ஜி மெட்டல்ஸ் மற்றும் மைனிங் ஃபண்ட் நிறுவனத்தின் (சினர்ஜி ஃபண்ட்) முதலீட்டு நிதி நிறுவனமாக சினர்ஜி மெட்டல்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஹோல்டிங் செயல்படுகிறது. தொழில்துறைகள், உலோகங்கள் மற்றும் எரிசக்தித் துறையில் சர்வதேச அளவில் சினர்ஜி ஃபண்ட் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.

இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஜே எஸ் டபிள்யூ சிமெண்ட் நிறுவனம், ஜே எஸ் டபிள்யூ நிறுவனங்களின் குழுமத்திற்கு சொந்தமானதாகும். சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு, சிமெண்ட் தயாரிப்பதற்குத் தேவையான கச்சாப் பொருட்களின் சுரங்கம், கலவை போன்ற பணிகளிலும், சாலைப் போக்குவரத்து சேவைகள், கட்டுமானப் பணிக்காக நிலம் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குதல் உள்ளிட்ட துறைகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735761

*****************



(Release ID: 1735834) Visitor Counter : 168