நிதி அமைச்சகம்

சமையல் எண்ணெய் இறக்குமதி காலம் 3 முதல் 4 நாட்களாக குறைப்பு: துறைமுகங்களில் எந்த தேக்கமும் இல்லை

Posted On: 14 JUL 2021 5:35PM by PIB Chennai

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் கண்காணிப்பது போன்றவற்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் (FSSAI) இணைந்து இந்திய சுங்கத்துறை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.  சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான காலம் 3 முதல் 4 நாட்களாக குறைந்துள்ளது. மாதிரிகளை பரிசோதிப்பது, வரி செலுத்துவது மற்றும் சரக்குகளை கையாள்வது போன்றவற்றுக்கு வழக்கமாக 3 முதல் 4 நாட்கள் ஆகின்றன. துறைமுகங்களில் சமையல் எண்ணெய்  தேங்காமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஒப்புதலை விரைவில் வழங்க, அனைத்து சுங்க மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கீழ்கண்ட தகவல்கள் கச்சா பாமாயில் இறக்குமதி அதிகரிப்பதை காட்டுகிறது:

30.6.20 முதல் 12.7.20 வரை 2,90,694 மெட்ரிக் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு இதே காலத்தில் இதன் அளவு 4,04,341 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

 

சமையல் எண்ணெய் தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை, அனுமதி அளவுகள், நிலுவை நிலவரம் ஆகியவை வார அடிப்படையில் வேளாண் பொருட்களுக்கான விலை குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவால் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த அம்சங்களை மத்திய அமைச்சர்களும், செயலாளர்களும் ஆய்வு செய்கின்றனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735455

*****************



(Release ID: 1735572) Visitor Counter : 209