சுற்றுலா அமைச்சகம்

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கிஷண் ரெட்டி பிரிக்ஸ் நாட்டு சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்

Posted On: 13 JUL 2021 7:14PM by PIB Chennai

பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமையேற்பதன் ஒரு பகுதியாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கிஷண் ரெட்டி இன்று பிரிக்ஸ் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா என அனைத்து உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் நாடுகளிடையே சுற்றுலாவை வளர்க்கும் வகையில் பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா நடத்தியது. இக்கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளிடேயே சுற்றுலா தொடர்பான கூட்டுறவு ஆய்வு செய்யப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளிடேயே சுற்றுலாவில் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டுக்கு அழைப்பு விடும் அமைச்சரின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமைச்சரின் அறிக்கை கொரோனா பெருந்தொற்று பொது சுகாதாரத்துக்கும், நிலைக்கதக்க வளர்ச்சி இலக்குகளுக்கும் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளதை அங்கீகரித்தது.

சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கிஷண் ரெட்டி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், மற்ற பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலா திட்டங்களையும், வாய்ப்புகளையும் அறிய வேண்டியதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டினார். இதன்மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே சுற்றுலா மேம்படும் என்று அவர் கூறினார். மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு புராதான சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, இயற்கை சுற்றுலா, வன விலங்கு சுற்றுலா, சூழல் சுற்றுலா போன்ற பொதுவான சுற்றுலா முறைகள் இருப்பது பிரிக்ஸ் நாடுகளிடேயே கூட்டுறவு மேம்படவும், தகவல் பரிமாறவும் உதவும் என்று கூறினார்.

*****************


(Release ID: 1735206) Visitor Counter : 600


Read this release in: Urdu , English , Hindi , Telugu