எரிசக்தி அமைச்சகம்

நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்க திட்டத்தை உருவாக்க லடாக் யூனியன் பிரதேசம், என்டிபிசி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் திரு ஆர் கே சிங் பாராட்டு

Posted On: 13 JUL 2021 4:30PM by PIB Chennai

கரிமம் இல்லாத புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உறுதி செய்யும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்க்கும் வகையில் நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டத்தை நிறுவுவதற்கு லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் எல்ஏஹெச்டிசி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழகத்திற்கு மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெளியீடு இல்லாத பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் இயக்கத் திட்டத்தைக் கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக லே விரைவில் உருவாகும் என்பது நமக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்றார் அவர்.

லடாக் பகுதியில் நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டத்தை உருவாக்குவதற்கு தேசிய அனல்மின் கழகத்தின் துணை நிறுவனமான ஆர் இ எல், லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவை இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன. இதேநாளில் லே நகரத்தில் தேசிய அனல்மின் கழகத்தின் சூரிய மின்சக்தித் திட்டங்களும் தொடங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735083

*****************(Release ID: 1735131) Visitor Counter : 90