அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புல்வாமாவில் சிஎஸ்ஐஆர்-ன் லாவண்டர் சாகுபடியை சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் மாண்டே பார்வையிட்டார்

Posted On: 12 JUL 2021 7:16PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்ட சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு) தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் மாண்டே, ஸ்ரீநகரில் உள்ள சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம் (ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான இந்திய நிறுவனம்) கிளை ஆய்வகத்தையும் புல்வாமாவில் உள்ள நிறுவனத்தின் கள மையத்தையும் பார்வையிட்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

லாவண்டர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில்முனைவோருடன்  உரையாடிய அவர், அவர்களது வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் லாவண்டர் சாகுபடி குறிப்பிட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தன்னிறைவை உறுதி செய்யும் வகையில், சாகுபடியை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கும், அதன் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கப்படும் என்று விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு டாக்டர் மாண்டே உறுதி அளித்தார்.

வேளாண் உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகப்படுத்துவதற்கு பயிர்களின் ஒருங்கிணைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார். கள மையத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம், ஜம்மு, இயக்குநர் டாக்டர் டி ஶ்ரீநிவாச ரெட்டி, யூனியன் பிரதேசத்தில் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் தேவையான தொழில் விவசாயத்தின், குறிப்பாக லாவண்டர் சாகுபடியின் மையமாக இந்த மையம் இருப்பதாக கூறினர்.

சிஎஸ்ஐஆரின் செயல்பாடுகளை பாராட்டிய துணைநிலை ஆளுநர், ஜம்மு காஷ்மீரில் உள்ள திறமை மிகுந்த இளைஞர்களுக்கு அறிவியல் மற்றும் தொழிலக பயிற்சி அளிக்கப்படுவது குறித்தும் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734866

----



(Release ID: 1734905) Visitor Counter : 261


Read this release in: English , Urdu , Hindi , Punjabi