கலாசாரத்துறை அமைச்சகம்

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி மற்றும் கலாச்சாரம் இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி தேசிய ஆவண காப்பகத்தை பார்வையிட்டனர்

Posted On: 12 JUL 2021 6:05PM by PIB Chennai

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி, கலாச்சாரம் இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகியுடன் இணைந்து புதுதில்லியில் உள்ள ஜன்பத்தில் செயல்பட்டு வரும் தேசிய ஆவண காப்பகத்தை பார்வையிட்டு, ஆவண மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மயம் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு ராகவேந்திர சிங், தேசிய ஆவண காப்பகத்தின் தலைமை இயக்குநர் திரு சந்தன் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வு அறை, பழைய பொருட்கள் சேமிப்பு அறை, பாதுகாப்பு அறை, ஆவண காப்பகத்தின் பழைய கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர், இந்தியாவின் சிறப்பான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நாட்டின் பழைய ஆவணங்களில் வளமிக்க மற்றும் விரிவான சேகரிப்பை காணும் வாய்ப்பு தமக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.

உலகத்தின் மிகப்பெரிய மற்றும் மதிப்பு மிகுந்த ஆவண காப்பகங்களில் ஒன்றாக தேசிய ஆவண காப்பகம் திகழ்வதாகவும், 800 மில்லியன் பக்கங்கள், 5.7 மில்லியன் கோப்புகள், 1.2 லட்சம் வரைபடங்கள் உள்ளிட்டவற்றை தேசிய ஆவண காப்பகம் தன்னகத்தே கொண்டிருப்பதாக கூறியதோடு, எதிர்கால சந்ததியினருக்காக இவற்றை பாதுகாப்பது அவசியம் என்றார்.

அமிர்த மகோத்சவத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை, போராட்டம் குறித்த ஆவணங்களை முன்னுரிமை அடிப்படையில் டிஜிட்டல்மயமாக்குவதற்கான திட்டம் இருக்கிறதென்றும், இதன் மூலம் நமது நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக செய்யப்பட்ட தியாகங்கள் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தேசிய ஆவணங்களின் பாதுகாவலராக உள்ள அரசு, மத்திய விஸ்டா திட்டத்தின் மறுஉருவாக்கத்தின் போது அவற்றின் முழு பாதுகாப்பை உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734831

----



(Release ID: 1734887) Visitor Counter : 232