சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

திரிபுராவில் டெல்டா பிளஸ் கொரோனா வகை கண்டறியப்படவில்லை: டெல்டா வகைதான் கண்டறியப்பட்டது

Posted On: 11 JUL 2021 7:44PM by PIB Chennai

திரிபுராவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அது தொடர்பாக கீழ்கண்ட உண்மைகள் தெரிவிக்கப்படுகின்றன:

* முழு மரபணு வரிசையை கண்டறிவதற்காக, 15 மாதிரிகள் திரிபுராவில் இருந்து மேற்கு வங்கம் கல்யாணியில் உள்ள உயிரி மருத்துவ மரபணு தேசிய மையத்துக்கு (NIBMG) அனுப்பப்பட்டது.

* இவை கடந்த 2021 ஏப்ரல் முதல் மே வரை திரிபுராவில் கொவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின்  ஆர்டி-பிசிஆர் மாதிரிகள்.

* கல்யாணியில் உள்ள என்ஐபிஎம்ஜி மையத்தில் செய்யப்பட்ட முழு மரபணு வரிசை சோதனையில் கீழ்கண்ட முடிவுகள் வெளியாயின.

* 3 மாதிரிகளில் B.1.1.7 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 * 11 மாதிரிகளில் B.1.617.1(கப்பா) பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

* 138 மாதிரிகளில் B.1.617.2 (டெல்டா) பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட மாதிரிகளில், டெல்டா பிளஸ் வகை கண்டறியப்படவில்லை.

*****************



(Release ID: 1734670) Visitor Counter : 189


Read this release in: English , Urdu , Marathi , Hindi