குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பூட்டான், ஐக்கிய அரபு எமிரேட் & மெக்சிகோவில் வர்த்தக குறியீட்டு பதிவுகளை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது; ‘காதி’ வணிகப் பெயரை பாதுகாப்பதற்காக 40 நாடுகளில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

Posted On: 10 JUL 2021 3:57PM by PIB Chennai

காதிவணிக அடையாளத்தை சர்வதேச அளவில் பாதுகாக்கும் மிகப்பெரிய நடவடிக்கையாக, பூட்டான், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் வர்த்தக குறியீட்டு பதிவுகளை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சமீபத்தில் பெற்றுள்ளது,

மேலும், அமெரிக்கா, கத்தார், இலங்கை, ஜப்பான், இத்தாலி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில் உள்ளிட்ட 40 நாடுகளில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் வர்த்தக குறியீட்டு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

பூட்டானிடம் இருந்து வர்த்தக குறியீட்டு பதிவு ஜூலை 9 அன்று பெறப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஜூன் 28 அன்று வர்த்தக குறியீட்டு பதிவு பெறப்பட்டது. இதன் மூலம், வளைகுடா நாடு ஒன்றில் முதல் முறையாக வர்த்தக குறியீட்டு பதிவை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது. முன்னதாக, மெக்சிகோவிடம் இருந்து 2020 டிசம்பரில் வர்த்தக குறியீட்டு பதிவை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் பெற்றது.

ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய ஆறு நாடுகளில் இது வரைகாதிஎனும் வணிகப் பெயருக்கான பதிவுகளை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் இது வரை பெற்றுள்ளது. பூட்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மெக்சிகோவில் வர்த்தக குறியீட்டு பதிவு பெற்றிருப்பதன் மூலம் இந்த எண்ணிக்கை 9 ஆக தற்போது உயர்ந்துள்ளது.

மகாத்மா காந்தி வழங்கிய பெயரானகாதி’-யை பாதுகாப்பதற்காக கடந்த 5 வருடங்களாக தொடர் முயற்சிகளை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் எடுத்து வருகிறது.

இவற்றின் மூலம் காதி எனும் வர்த்தகப்பெயர் சர்வதேச அளவில் தவறாக பயன்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படும் என்று காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.

மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் சில உள்ளூர் தனியார் நிறுவனங்கள் காதி எனும் வர்த்தக பெயருக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்திருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் எடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734415

                                                                             -----


(Release ID: 1734454) Visitor Counter : 284