அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உப்பு சுரக்கும் தன்மையிலான அலையாத்தித் தாவர இனத்தின் மரபணு பற்றிய ஆய்வு
Posted On:
10 JUL 2021 9:30AM by PIB Chennai
புவனேஸ்வரில் உள்ள டிபிடி ஆயுள் அறிவியல் நிறுவனம் மற்றும் தமிழ்நாட்டின் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் எஸ்ஆர்எம்-டிபிடி மேம்பட்ட ஆயுள் அறிவு தொழில்நுட்பங்களுக்கான கூட்டணி தளம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அவிசென்னியா மெரினா என்ற அதிக உப்பு- சகிப்புத்தன்மை மற்றும் உப்பு- சுரக்கும் தன்மை உடைய உண்மையான அலையாத்தித் தாவர இனத்தின் முழு மரபணு வரிசைமுறை பற்றிய குறிப்பை முதன்முறையாக பதிவு செய்துள்ளனர்.
அலையாத்தித் தாவரம் என்ற சதுப்பு நிலப்பகுதிகளில் காணப்படும் ஒரு தனித்துவமான உயிரினம், பல்வேறு தகவமைப்பு வழிமுறைகள் மூலம் அதிகளவு உப்பு தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளும். கடற்கரைப் பகுதிகளின் முக்கியமான வளமாகத் திகழும் அலையாத்தித் தாவரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் மதிப்பையும் பெற்றுள்ளன. கடல் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தி, கடற்கரைகளைப் பாதுகாத்து, நிலத்தில் வசிக்கும் பல்வேறு உயிரினங்களின் வசிப்பிடமாகவும் இந்தத் தாவரங்கள் விளங்குகின்றன.
இந்தியாவின் அனைத்து அலையாத்திப் பகுதிகளில் பெரும்பாலாகக் காணப்படும் இனங்களுள் ஒன்று அவிசென்னியா மெரினா. உப்பு சுரக்கும் தன்மை மற்றும் மிக அதிக உப்பை சகித்துக்கொள்ளும் இந்த வகையான தாவரம் 75% கடல் தண்ணீரில் வளர்வதோடு, 250 %க்கும் அதிகமான உப்புத் தண்ணீரை சகித்துக்கொள்ளும் தன்மையையும் பெற்றுள்ளது. அரிய தாவர இனங்களுள் ஒன்றான இது, இலைகளில் உள்ள உப்பு சுரப்பிகள் வழியாக 40% உப்பை வெளியேற்றுவதுடன், வேர்களுக்கு உப்பு நுழைவதை தடுப்பதற்கான அசாதாரண திறனையும் கொண்டுள்ளது.
அவிசென்னியா மெரினா அலையாத்தித் தாவரம் குறித்த ஆய்வு, இயற்கை தொடர்புகள் உயிரியலின் சமீபத்திய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734363
------
(Release ID: 1734418)
Visitor Counter : 379