அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அரிதான சூப்பர் லுமினஸ் சூப்பர் நோவா கண்டுபிடிப்பு
Posted On:
10 JUL 2021 9:08AM by PIB Chennai
மிகவும் பிரகாசமான, ஹைட்ரஜன் பற்றாக்குறையுள்ள, வேகமாக உருவாகும் சூப்பர்நோவா, ஓர் அதி நவீன வகை நொதுமி நட்சத்திரத்திலிருந்து பெற்ற ஆற்றலுடன் பிரகாசிப்பதாகவும், இது அதிக சக்தி வாய்ந்த காந்தப்புலத்தை கொண்டுள்ளதாகவும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய பழங்கால விண்வெளி சார்ந்த பொருட்கள் பற்றிய ஆழமான ஆய்வு, முற்கால பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய உதவிகரமாக இருக்கும்.
சூப்பர் லுமினஸ் சூப்பர்நோவா என்று அழைக்கப்படும் இந்த வகையான சூப்பர்நோவா மிகவும் அரிதானது. ஏனென்றால் அவை பொதுவாக மிகப்பெரிய நட்சத்திரங்களிலிருந்து உருவாகின்றன. நமது விண்மீன் மண்டலத்திலோ அல்லது அதைச் சுற்றியுள்ள விண்மீன் திரள்களிலோ இதுபோன்ற பிரம்மாண்ட நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அவற்றுள் நிறமாலையியல் முறையில் இதுவரை 150 உட்பொருட்களில் சூப்பர் லுமினஸ் சூப்பர்நோவா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அண்மையில் நிறுவப்பட்ட தேவஸ்தல் ஒளியியல் தொலைநோக்கி, மற்றும் இதர இந்திய தொலைநோக்கிகளான சம்பூர்ணானந்த் மற்றும் இமாலயன் சந்திரா தொலைநோக்கிகள் மூலம் விஞ்ஞானிகள் குழு இதனைக் கண்டறிந்துள்ளது. வெங்காயம் போல் காட்சியளித்த சூப்பர்நோவாவின் வெளிப்புற அடுக்குகள் உரிந்து, வேறு ஒரு ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட ஆற்றலின் மூலம் மையம் பிரகாசித்ததை அவர்கள் கண்டனர். டாக்டர் எஸ் பி பாண்டேவின் வழிகாட்டுதலின்படி, முனைவர் படிப்பு மாணவரான திரு அமித் குமாரின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இந்த ஆய்வு, ராயல் வானியல்சார் சங்கத்தின் மாதாந்திர அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியீடு பற்றிய விவரங்களைக் காண:
https://academic.oup.com/mnras/article/502/2/1678/6103929
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734358
----
(Release ID: 1734403)
Visitor Counter : 308