அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியா முன்மொழிந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் சார்ந்த கூட்டுறவு செயல்திட்டத்திற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒப்புதல்

Posted On: 09 JUL 2021 4:55PM by PIB Chennai

பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டும் குழுவின் 12-வது கூட்டத்தின் போது இந்தியா முன்மொழிந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் சார்ந்த கூட்டுறவு செயல்திட்டத்திற்கு (2021-24) அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் ஒப்புதல்  அளித்துள்ளன.

ஒருவரின் புதுமைகள் சூழலியலை மற்றவர் பகிர்ந்து கொள்வதற்கும் புதுமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோரின் இணைப்பிற்கும் இந்தியா முன்மொழிந்து இருந்தது. செயல்திட்டத்தின் விவரங்கள் குறித்து பிரிக்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் புதுமைகள் தொழில்முனைதல் கூட்டு பணிக்குழு ஆய்வு செய்யும். குறிப்பிட்ட நாட்டின் அறிவியல் தொழில்நட்ப புதுமைகள் மைய அமைப்பிலிருந்து பிரிக்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் புதுமைகள் தொழில்முனைதல் கூட்டு பணிக்குழுவுக்கு முன்மொழிதலை அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

 பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டும் குழுவின் 12-வது கூட்டத்தை 2021 ஜூலை 8 அன்று இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நடத்தியது. அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல் அமைச்சர்கள் மற்றும் முகமைகள் இதில் பங்கேற்றனர்.

இந்திய தொழில்நுட்ப உச்சி மாநாட்டிற்கு பிரிக்ஸ் கூட்டை வரவேற்கும் இந்தியாவின் முன்மொழிதல் அனைத்து நாடுகளின் ஆதரவைப் பெற்ற நிலையில், அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக பிரிக்ஸ் ஷெர்பா அலுவலகத்திற்கு அதை அனுப்புவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகத்தால் இந்தியாவின் முன்மொழிதல் பிரிக்ஸ் நாடுகளின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

இந்திய தரப்பில் இருந்து, ஆலோசகரும் சர்வதேச ஒத்துழைப்பின் தலைவருமான திரு சஞ்சீவ்குமார் வர்ஷ்னே இக்கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1734246

****************


(Release ID: 1734300) Visitor Counter : 272