அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இணை அமைச்சராக திரு ஜிதேந்திர சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUL 2021 5:48PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) திரு ஜிதேந்திர சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பலன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையிலும், வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அவற்றை சிறப்பாக பயன்படுத்தும் வகையிலும் பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்குகளை அடைய தாம் பாடுபட இருப்பதாக அவர் தெரிவித்தார்,

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733777

                                                                                                -----


(வெளியீட்டு அடையாள எண்: 1734005) வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi