உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சராக திரு.பசுபதி குமார் பராஸ் பொறுப்பேற்றுள்ளார்
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணையமைச்சராக திரு.பிரஹலாத் சிங் பட்டேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
प्रविष्टि तिथि:
08 JUL 2021 6:06PM by PIB Chennai
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சராக திரு.பசுபதி குமார் பராஸ் இன்று டெல்லியில் உள்ள பஞ்சசீல பவனில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துறை செயலாளர் திருமதி. புஷ்பா சுப்பிரமணியம் மற்றும் உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர். பொறுப்பேற்றதும், அமைச்சர் துறையின் மூத்த அதிகாரிகளை சந்தித்து அங்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.
தன் மீது நம்பிக்கை வைத்து உணவு பதப்படுத்துதல் தொழில் துறையை வழங்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அமைச்சர் பசுபதி குமார் நன்றி தெரிவித்தார். இத்துறையின் திட்டங்கள் மேலும் முன்னெடுத்துச் செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
அமைச்சர் பசுபதி குமார், பீகார் மாநிலம் ஹாஜிப்பூர் பாராளுமன்றத் தொகுதியைச் சேர்ந்தவராவார். இவர், இதற்கு முன்னதாக பீகாரில் அமைச்சராகவும், 7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1 முறை சட்ட மேல்சபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணையமைச்சராக திரு.பிரஹலாத் சிங் பட்டேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தாமோஹ் நாடாளுமன்ற தொகுதியில் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014 பிஜேபி கூட்டணி ஆட்சியில், பல நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராக இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733786
(रिलीज़ आईडी: 1734003)
आगंतुक पटल : 173