சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

எட்டு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான திறன் வளர்த்தல் பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது

प्रविष्टि तिथि: 08 JUL 2021 5:55PM by PIB Chennai

இந்தியாவின் தற்போதைய கொவிட் நிலவரம், கொவிட் தடுப்புமருந்து மற்றும் தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கை குறித்த பொய்களை களைதல் மற்றும் சரியான கொவிட் நடத்தை விதிமுறைகளின் முக்கியத்துவம் குறித்த திறன் வளர்த்தல் பயிலரங்கை வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சுகாதார நிருபர்களுக்காக யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று நடத்தியது.

அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சுகாதார நிருபர்கள் காணொலி மூலம் பட்டறையில் கலந்து கொண்டனர்.

130-க்கும் மேற்பட்ட சுகாதார பத்திரிகையாளர்கள் மற்றும் தூர்தர்ஷன் நியூஸ், அகில இந்திய வானொலி மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகங்களை சேர்ந்த மூத்த அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் திரு லாவ் அகர்வால், கொவிட்-19-க்கு எதிரான போரில் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்துபவர்களாக ஊடகவியலாளர்கள் விளங்குவதாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை அவர்கள் ஊக்கப்படுத்தி, பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை அவர்கள் முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், யுனிசெஃப், தூர்தர்ஷன் நியூஸ், பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் அகில இந்திய வானொலியை சேர்ந்த மூத்த அலுவலர்கள், நாடு முழுவதிலும் இருந்து சுகாதார பத்திரிகையாளர்கள் இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733783

-----


(रिलीज़ आईडी: 1733996) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali