பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ ஓய்வூதிய ஒப்புதல் மற்றும் விநியோகத்துக்கு இணைய அடிப்படையிலான ஒருங்கிணைந்த முறை: பாதுகாப்பு அமைச்சகம் அமல்
प्रविष्टि तिथि:
08 JUL 2021 5:12PM by PIB Chennai
ராணுவ ஓய்வூதியத்துக்கான ஒப்புதல் மற்றும் விநியோகத்தை தானாக மேற்கொள்வதற்கு, ‘ஸ்பார்ஷ்’(SPARSH [System for Pension Administration (Raksha)], என்ற ஒருங்கிணைந்த முறையை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
இணைய அடிப்படையிலான இந்த முறை, ஓய்வூதிய கோரிக்கையை செயல்படுத்தி, ஓய்வூதியப் பணத்தை, வெளிப்புற தலையீடு இல்லாமல் ராணுவ ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துகிறது. ஒய்வூதியதாரர்களுக்கான இந்த இணையதளத்தில், ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை பெறலாம்.
ஓய்வூதியம் தொடர்பான புகார்களை பதிவு செய்து, குறைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
இதற்கான ஒப்பந்தம், பாதுகாப்பு கணக்குகள் தலைமை கட்டுப்பாட்டாளர் (CGDA) திரு ரஜ்னிஷ் குமார் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி அதிகாரிகள் இடையே, பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் பாதுகாப்பு சேவைகள் நிதி ஆலோசகர் திரு சஞ்ஜீவ் மிட்டல் முன்னிலையில் தில்லியில் இன்று கையெழுத்தானது.
இதன்படி, ஓய்வூதியதாரர்கள் இந்த இரு வங்கிககளின் பல்வேறு கிளைகளை அணுகி, ஓய்வூதியம் தொடர்பான சேவைகளை பெறலாம்.
இந்த இணைய நடைமுறையில் தொடர்புடைய அனைவரையும் பாராட்டிய பாதுகாப்புத்துறை செயலாளர், நீண்ட கால தேவையை ‘ஸ்பார்ஷ்’ நிறைவேற்றியது என கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733751
----
(रिलीज़ आईडी: 1733948)
आगंतुक पटल : 336