நிதி அமைச்சகம்

அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார ஆபரேட்டர்களுக்கான விண்ணப்பத்தை (AEO T2 and AEO T3) ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யும் வசதி தொடக்கம்

प्रविष्टि तिथि: 07 JUL 2021 6:31PM by PIB Chennai

அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார ஆபரேட்டர்களுக்கான விண்ணப்பத்தை (AEO T2 and AEO T3) ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யும் வசதியை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இன்று தொடங்கியது.

இந்த விண்ணப்பம்  www.aeoindia.gov.in என்ற இணையளத்தில் உள்ளதுசரியான நேரத்தில் தலையீடு மற்றும் செயல்திறனுக்காக, நேரடியாக தாக்கல் செய்த ஏஇஓ டி2 மற்றும் டி3 விண்ணப்பங்களை, டிஜிட்டல் மூலமாக கண்காணிப்பதற்கு இந்த இணைய விண்ணப்பத்தின் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது

ஏஇஓ டி1- செயல்படுத்துவதற்கான ஏஇஓ விண்ணப்பம், www.aeoindia.gov.in இணையளத்தில் 2018 டிசம்பர் முதல் செயல்பாட்டில் உள்ளதுமத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா நடவடிக்கையின் படி, இதை டிஜிட்டல் மயமாக்க, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், ஏஇஓ டி2 மற்றும் ஏஇஓ டி3 விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கான புதிய பதிப்பை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் நிகழ்நேரத்தில் கண்காணித்து டிஜிட்டல் சான்றிதழ் வழங்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட சிபிஐசி சுற்றறிக்கை எண். 13/2021-சுங்கம்- பார்க்கவும்.

----


(रिलीज़ आईडी: 1733485) आगंतुक पटल : 377
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi