வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள பாலியா கோதுமை வகையின் ஏற்றுமதி குஜராத்திலிருந்து தொடக்கம்

Posted On: 07 JUL 2021 5:45PM by PIB Chennai

கோதுமையின் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும் வகையில் புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள பாலியா கோதுமை வகையின் முதல் சரக்கு குஜராத்திலிருந்து கென்யாவிற்கும் இலங்கைக்கும் இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. புரதச் சத்துமிக்க இந்த வகை கோதுமை, இனிப்பு சுவை கொண்டது. குஜராத்தின் பால் பகுதியைச் சுற்றியுள்ள அகமதாபாத், ஆனந்த், பவாநகர், சுரேந்திரநகர், பரூச் ஆகிய மாவட்டங்களில் இந்த வகை பயிர் அதிகம் விளைகிறது.

நீர்பாசனம் இல்லாமல் மானாவாரி நிலையில் வளர்க்கப்பட்டு, குஜராத்தில் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிரிடப்படுவது இந்த கோதுமை வகையின் தனித்துவமான பண்பாகும். பாலியா வகை கோதுமைக்குக் கடந்த 2011-ஆம் ஆண்டு புவிசார் குறியீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த முன்முயற்சி, இந்தியாவின் கோதுமை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதியாண்டின் ரூ. 444 கோடியை விட 808% அதிகமாக, ரூ. 4034 கோடியாக மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியது.

2020-21 ஆம் ஆண்டில் ஏமன், இந்தோனேசியா, பூட்டான், ஃபிலிப்பைன்ஸ், ஈரான், கம்போடியா, மியான்மர் ஆகிய 7 நாடுகளுக்கு கணிசமான அளவில் தானியங்களை இந்தியா புதிதாக ஏற்றுமதி செய்தது.

முந்தைய நிதி ஆண்டுகளில் குறைந்த அளவிலேயே கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. 2018-19 ஆம் ஆண்டில் இந்த 7 நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்படவில்லை. 2019-20 ஆம் ஆண்டில் வெறும் 4 மெட்ரிக் டன் தானியம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கோதுமையின் அளவு 1.48 லட்சம் டன்னாக அதிகரித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733412

 

----



(Release ID: 1733458) Visitor Counter : 261


Read this release in: English , Urdu , Hindi , Gujarati