விண்வெளித்துறை
சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக பல்வேறு துறைகளில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
प्रविष्टि तिथि:
05 JUL 2021 6:07PM by PIB Chennai
பிரதமராக திரு நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து, சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக பல்வேறு துறைகளில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் விண்வெளி துறையின் மூத்த அலுவலர்களோடு உரையாடிய அவர், செயற்கைக்கோள்களை ஏவுவது மட்டுமே இனி இஸ்ரோவின் வேலை இல்லை என்றும், கடந்த ஏழு வருடங்களாக வளர்ச்சிப் பணிகளில் அதன் பங்களிப்பை விரிவுபடுத்தி பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘இந்தியாவை மாற்றியமைக்கும்’ லட்சியத்திற்கு இஸ்ரோ பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
விவசாயம், மண்வளம், நீர் வளம், நில பயன்பாடு, ஊரக வளர்ச்சி, புவி மற்றும் பருவநிலை படிப்புகள், புவி அறிவியல், நகர்ப்புறம் & உள்கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை ஆதரவு, வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் புவிசார் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி முடிவெடுப்பதற்காக விண்வெளி தொழில்நுட்பம் விரிவாக பயன்படுத்தப்பட்டு வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இஸ்ரோவை பாராட்டிய அமைச்சர், கொவிட் பெருந்தொற்றின் போது பல்வேறு மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜனை இஸ்ரோ வழங்கியதை நினைவுக் கூர்ந்தார். இது தவிர, ஏற்கனவே உள்ள வளங்களுக்கு மறுநோக்கம் அளிப்பதிலும், திறன்களை மேம்படுத்துவதிலும், தொழில்நுட்ப பகிர்தலின் மூலமாகவும் கொவிட்-19 தொற்றுகள் அதிகளவில் இருந்த பொது பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போருக்கு இஸ்ரோ துணை நின்றதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1732870
*****************
(रिलीज़ आईडी: 1732943)
आगंतुक पटल : 327