சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUL 2021 9:10AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 35.28 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில்  39,796 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,82,071 ஆகக் குறைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.58 சதவீதமாகும்.

நம் நாட்டில் இதுவரை 2,97,00,430 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 42,352 பேர் குணமடைந்துள்ளார்கள்.

தொடர்ந்து 53-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.40 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 28 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாக, 2.61 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 41.97 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732724

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1732798) வருகையாளர் எண்ணிக்கை : 312
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam