புவி அறிவியல் அமைச்சகம்
தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் மிதமாக இருக்கும்
Posted On:
04 JUL 2021 5:39PM by PIB Chennai
தில்லி தேசிய தலைநகர் பகுதியில், காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது, ஆனால் இன்று மிதமான அளவில் இருக்கும். ஜூலை 5 மற்றும் 6ம் தேதிகளிலும், காற்றின் தரம் மிதமான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
காற்றில் மாசு அளவு பிஎம் 10 என்ற அளவில் இருக்கும். அடுத்த 5 நாட்களில் காற்றின் தரம் மிதமாக இருக்கும் மற்றும் மழைக்குப்பின் திருப்திகரமான அளவில் மேம்படும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இடியுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732647
*****************
(Release ID: 1732652)
Visitor Counter : 252