சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஒப்புதல்
Posted On:
02 JUL 2021 5:55PM by PIB Chennai
நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவு மூலம், கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இந்த முடிவு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கொவிட்-19க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவும் (NEGVAC) ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக, தேசிய அளவிலான ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. இதில், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட, நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைக்கு இந்த கூட்டத்தில் ஒருமனதாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்கள், மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான ஆலோசனை சாதனங்கள், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தகவல் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732312
*****************
(Release ID: 1732365)
Visitor Counter : 434