சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான கொவிட்-19 குறித்த திறன் வளர்த்தல் பட்டறையை மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது

Posted On: 01 JUL 2021 7:05PM by PIB Chennai

இந்தியாவின் தற்போதைய கொவிட் நிலவரம், கொவிட் தடுப்புமருந்து மற்றும் தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கை குறித்த பொய்களை களைதல் மற்றும் சரியான கொவிட் நடத்தை விதிமுறைகளின் முக்கியத்துவம் குறித்த திறன் வளர்த்தல் பட்டறையை வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சுகாதார நிருபர்களுக்காக யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று நடத்தியது.

தமிழ்நாடு, அசாம், ஒடிசா, கேரளா, மேகாலயா, மிசோராம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், மேற்கு வங்கம், தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சுகாதார நிருபர்கள் காணொலி மூலம் பட்டறையில் கலந்து கொண்டனர்.

200-க்கும் மேற்பட்ட சுகாதார பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தூர்தர்ஷன் நியூஸ், அகில இந்திய வானொலி மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகங்களை சேர்ந்த மூத்த அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த பட்டறையில் உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக கூடுதல் செயலாளர் திருமிகு ஆர்த்தி அஹுஜா, கொவிட்-19-க்கு எதிரான போரில் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்துபவர்களாக ஊடகவியலாளர்கள் விளங்குவதாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை அவர்கள் ஊக்கப்படுத்தி, பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை அவர்கள் முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நேர்மறை செயல்கள் நடைபெறுவதை ஊக்குவிக்கும் விதத்தில் நேர்மறை செய்திகள் மற்றும் உதாரணமாக திகழ்வோர் குறித்த செய்திகளுக்கு ஊடகவியலாளர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், யுனிசெஃப், தூர்தர்ஷன் நியூஸ், பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் அகில இந்திய வானொலியை சேர்ந்த மூத்த அலுவலர்கள், நாடு முழுவதிலும் இருந்து சுகாதார பத்திரிகையாளர்கள் இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731994

-----



(Release ID: 1732061) Visitor Counter : 232