சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உயிரிழந்த கொவிட் வீரர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் தினத்தன்று திரு அஷ்வினி குமார் சௌபே மரக்கன்றுகளை நட்டார்

Posted On: 01 JUL 2021 7:17PM by PIB Chennai

உயிரிழந்த கொவிட் வீரர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் தினமான இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே அமைச்சக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது கடமை ஆற்றுகையில் மருத்துவர்கள் செய்த மிகப்பெரும் தியாகங்களை யாரும் மறக்க மாட்டார்கள் என்று அமைச்சர் கூறினார். எந்தவொரு சமுதாயத்திலும் மருத்துவர்களின் பணி முக்கியமானது என்றாலும் கூட, பெருந்தொற்றின் போது மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதார பணியாளர்களின் எடுத்துக்காட்டான சேவைக்கு ஈடு இணை இல்லை என்று அவர் கூறினார்.

தலைசிறந்த மருத்துவ நிபுணரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதன் சந்திர ராய்க்கு திரு சௌபே அஞ்சலி செலுத்தினார். டாக்டர் ராயின் பிறந்த நாளை குறிப்பதற்காக தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731997

-----(Release ID: 1732048) Visitor Counter : 59


Read this release in: English , Urdu , Hindi