பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாகிய பின்னர் மிகப்பெரும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 01 JUL 2021 6:20PM by PIB Chennai

ஊழல் தடுப்பு சட்டம், பிரிவு சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் நீக்கம் மற்றும் 800க்கும் மேற்பட்ட மத்திய சட்டங்கள் அமல் உள்ளிட்ட மிகப்பெரிய சீர்திருத்தங்கள் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாகிய பிறகு நடந்துள்ளதாக வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் 'நல்லாளுகை நடைமுறைகளை பின்பற்றுதல்மண்டல மாநாட்டை ஸ்ரீநகரில் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவருக்கும் நீதி உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஏழு வருடங்களில் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு உகந்த சீர்திருத்தங்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் உட்பட ஒட்டுமொத்த நாட்டிற்கும் பலன் அளித்து உள்ளதாக அவர் கூறினார்.

'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை' எனும் தலைப்பிலான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் மின் சஞ்சிகையை வெளியிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முன்னிலையில், 2000 குடிமைப் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக என்சிஜிஜி மற்றும்  இம்பார்ட் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் செயலாளர் திரு சஞ்சய் சிங் ஜம்மு-கஷ்மீர் தலைமை செயலாளர் திரு அருண்குமார் மேத்தா மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் கூடுதல் செயலாளர் திரு வி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் மண்டல மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731975

----



(Release ID: 1732027) Visitor Counter : 219


Read this release in: English , Urdu , Hindi , Punjabi