குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

‘காதி’ பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்த தில்லி நிறுவனத்துக்கு தடை : உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு பிறப்பித்தது

Posted On: 01 JUL 2021 2:01PM by PIB Chennai

காதிபெயரை சட்டவிரோதமாக பயன்படுத்த தில்லி நிறுவனத்துக்கு உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு தடை விதித்துள்ளது.

தில்லியைச் சேர்ந்தஓம் சாஃப்ட் சொல்யூசன்ஸ்என்ற நிறுவனத்தை திரு.ஹர்ஸ் காபா என்பவர் நடத்தி வந்தார். இவர் www.urbankhadi.com என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி ஜவுளி விற்பனையில் ஈடுபட்டார். இது குறித்து உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பில்(WIPO), காதி மற்றும் கிராம தொழில் ஆணையம்(KVIC) சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதை விசாரித்த உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் நடுவர் மற்றும் சமரச மையம், காதி பெயரை பயன்படுத்த தில்லி நிறுவனத்துக்கு தடை விதித்தது. இது பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது

காதி என்ற பெயரை தில்லி நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது. காதியின் நல்லெண்ண பயன்களை பெறுவதற்காக, மோசமான நம்பிக்கையில், ஒம் சாஃப்ட் சொல்யூசன்ஸ் நிறுவனம் தனது இணைதளபெயரில் காதியை சேர்த்துள்ளது. இது, காதியுடன்  தொடர்புடைய அமைப்பு என மக்களை தவறாக வழிநடத்தும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த உத்தரவு குறித்து காதி மற்றும் கிராம தொழில் ஆணைய தலைவர் திரு வினய் குமார் சக்சேனா கூறுகையில், ‘‘ தனது பிராண்ட் பெயரை பயன்படுத்தும் விதிமுறை மீறலுக்கு எதிரான காதியின் போராட்டத்தை, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உத்தரவு வலுப்படுத்தும். தனது அடையாளம் மற்றும் உலகளாவிய பிரபலத்தை பாதுகாக்க காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். தவறான பயன்பாட்டை தடுக்க, காதி என்ற பெயரை பல நாடுகளில் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் பதிவு செய்துள்ளது. இது நமது கலைஞர்களின் வாழ்வாதரமாக உள்ளது.’’ என்றார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731868

 

----


(Release ID: 1731933) Visitor Counter : 284