இந்திய போட்டிகள் ஆணையம்

டெக் டேட்டா கார்ப்பரேஷனை சின்னெக்ஸ் கார்ப்பரேஷனுடன் இணைக்க இந்தியா போட்டியியல் ஆணையகம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 01 JUL 2021 1:03PM by PIB Chennai

போட்டியியல் சட்டம் 2002, பிரிவு 31 (1) இன் கீழ் டெக் டேட்டா கார்ப்பரேஷன் (டெக் டேட்டா) நிறுவனத்தை, சின்னெக்ஸ் கார்ப்பரேஷன் (சின்னெக்ஸ்) நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டியியல் சட்டம் 2002, பிரிவு 5 (சி)க்குட்பட்டு  இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கீழ்காணும் நடைமுறைகளின் வாயிலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்:

• டைகர் பேரண்ட் நிறுவனத்துடன் முதலாவது சார்நிலையை இணைத்து, எஞ்சியிருக்கும் நிறுவனமாக டைகர் பேரண்ட் செயல்படுவது.

• இரண்டாம் சார்நிலையுடன் டைகர் பேரண்டை இணைத்து, இரண்டாம் சார்நிலை, செயல்படும் நிறுவனமாக விளங்குவதுடன்  சின்னெக்ஸ் நிறுவனத்தின் நேரடி துணை நிறுவனமாகவும் செயல்படுவது.

மேல் குறிப்பிட்ட இரண்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகு, டைகர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் டைகர் பேரண்ட்டின் பொதுவான பங்குகளைக் கருத்தில் கொண்டு தகுந்த அறிவிப்பை சின்னெக்ஸ் வெளியிடும்.

இந்திய போட்டியியல் ஆணையகத்தின் விரிவான ஆணை விரைவில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731854

 

-----


(रिलीज़ आईडी: 1731892) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi