ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பாலின பிரச்சனைகளை தீர்க்க தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகள் குறித்த தொகுப்பை மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்

Posted On: 29 JUN 2021 5:10PM by PIB Chennai

பாலின பிரச்சனைகளை தீர்க்க தீனதயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகள் குறித்த தொகுப்பை மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று வெளியிட்டார்.

சுய உதவி குழு கூட்டமைப்புகளின் சமூக நடவடிக்கை குழுக்கள் மூலம் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

குழந்தை திருமணங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு கிராம அளவிலான சமூக நடவடிக்கை குழுக்கள் மூலம் எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பது குறித்து விளக்கப்பட்டது. 23 மாநிலங்களில் இருந்து தகவல்கள்  தொகுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க அமைச்சகம் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டிய மத்திய அமைச்சர், பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு கண்டு சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் சுய உதவிக் குழுக்களையும் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731174

-----

 



(Release ID: 1731292) Visitor Counter : 300