சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மலேரியா இல்லா தில்லியை நோக்கி: தில்லியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUN 2021 4:34PM by PIB Chennai

ஏந்திகள் மூலம் பரவும் நோய்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் புதுதில்லியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆய்வு செய்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே, துணைநிலை ஆளுநர் திரு அணில் பைஜால், தில்லி சுகாதார அமைச்சர் திரு சத்யேந்தர் ஜெயின், மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

2022-ம் ஆண்டுக்குள் தில்லியிலிருந்து மலேரியாவை  விரட்டுவது தான் கூட்டத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்தது. மலேரியாவை அறிவிக்கப்பட்ட நோயாக ஆக்கி ஒவ்வொரு பாதிப்பையும் கண்காணித்து சிகிச்சை அளித்து அதன் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731158

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1731257) வருகையாளர் எண்ணிக்கை : 270
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Kannada