அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ ஆக்ஸிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்டது : இந்தியன் சுவாச மருத்துவ அமைப்பு
Posted On:
27 JUN 2021 5:06PM by PIB Chennai
கொரோனா யுகத்தின் நம்பிக்கை: ஆக்ஸிஜன் என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை இந்தியன் சுவாச மருத்துவ அமைப்பு(ஐசிஎஸ்), சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ-யுடன் இணைந்து இன்று நடத்தியது. இதில் சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்) – சிஎம்இஆர்ஐ (மத்திய மெக்கானிக்கல் பொறியியல் ஆராய்ச்சி மையம்) இயக்குனர் பேராசிரியர் ஹரிஷ் ஹிரானி தலைமை உரையாற்றினார். மூச்சுவிடும் போது, கணிசமான ஆக்ஸிஜன் அளவை மனித உடல் நிராகரிக்கிறது என பேராசிரியர் ஹரிஸ் ஹிரானி கூறினார். அதிக அழுத்த ஆக்ஸிஜன் சிகிச்சையின் போது, வெளியேற்றப்படும் ஆக்ஸிஜன் சேகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ-ன் ஆக்ஸிஜன் செறிவூட்டல் ஆலையின் செயல்பாடு, ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு அப்பாலும் செயல்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தின் தூணாக குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பதால், அவர்களை ஒரு அமைப்புக்குள் கொண்டு வர, தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ நடத்துகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தொழில்நுட்பம், நாடு முழுவதும் உள்ள பல குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தொழில்நுட்ப பரவலுக்கு உதவுகின்றன. இதற்கான உரிமங்களும் மிக புதுமையான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
நவீன ஆக்ஸிஜன் முகக்கவசம் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இது வைரஸ் பரவலுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும். இதில் காற்றை உள்ளிழுப்பதற்கும், வெளியேற்றுவதற்கும் தனியாக வழிகள் உள்ளன. காற்றை வெளியேற்றும் பாதையில் கார்பன்டை ஆக்சைடு அகற்றும் சாதனம் மற்றும் பி.வி சல்லடை ஆகியவை உள்ளது.
சுவாச மருத்துவ அமைப்பின் உறுப்பினர் டாக்டர் தீபக் தல்வார் பேசுகையில், ஆக்ஸிஜன் சிகிச்சையின் பல்வேறு அறிகுறிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். இந்தியாவுக்காக, இந்தியாவில் உருவாக்கப்படும் பேராசிரியர் ஹிரானியின் ஆக்ஸிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பம் மிக அருமையானது என அவர் கூறினார்.
நாட்டில் ஆக்ஸிஜன் தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து, விரிவான விவாதம் இந்த இணைய கருத்தரங்கில் நடைப்பெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730720
-----
(Release ID: 1730749)
Visitor Counter : 285