மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பொதுத் தேர்வுகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் உரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JUN 2021 6:30PM by PIB Chennai

பொதுத் தேர்வுகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று உரையாடினார்.

கொவிட் காரணமாக மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு சிபிஎஸ்ஈ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு திரு பொக்ரியால் நன்றி தெரிவித்தார்.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டுக்கான விரிவான வழிகாட்டுதல்களை சிபிஎஸ்ஈ ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக திரு பொக்ரியால் தெரிவித்தார். மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்களுக்காக ஆகஸ்டில் நிலைமை சீரடைந்தவுடன் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் அரசின் முக்கிய முன்னுரிமைகள் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1730348

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1730375) வருகையாளர் எண்ணிக்கை : 278
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Kannada